Saturday, January 30, 2021

114 நாணுந்துறவுரைத்தல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

114 நாணுந்துறவுரைத்தல்

 ( இருவரும் நாணம் நீங்கிய நிலை)

குறள் 1131:

காமம் உழந்து வருந்தினார்க் கேம

மடலல்ல தில்லை வலி.


காதல் கனியவில்லை என்றால் மடலூர்தல்

காதலர்க்கு என்றும் துணை.

குறள் 1132:

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்

நாணினை நீக்கி நிறுத்து.


நிறைவேறாக் காதல் ! உயிரும் உடலும்

மடலேறும் நாணத்தை விட்டு.

குறள் 1133:

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்

காமுற்றார் ஏறும் மடல்.


நாணமும் ஆண்மையும் பெற்றிருந்தேன்!

இன்றோநான்

காதலால் பெற்றேன் மடல்.

குறள் 1134:

காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு

நல்லாண்மை என்னும் புணை.


காதலெனும் வெள்ளமோ நாணமெனும் ஆண்மையெனும்

தோணிகளைச் சாய்த்துவிடும் சாற்று.

குறள் 1135:

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு

மாலை உழக்கும் துயர்.


மாலைத்  துயரளிக்கும் காதலையும் வெற்றிகொள்ளும் 

வேலை மடலூர்தல் என்பதையும் தந்தாளே

காதலிதான் இங்கோ எனக்கு.

குறள் 1136:

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற

படலொல்லா பேதைக்கென் கண்.


நள்ளிரவில் கூட மடலூர்தல் எண்ணுகிறேன்!

உள்ளத்துக்  காதலால் நான்.

குறள் 1137:

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்

பெண்ணிற் பெருந்தக்க தில்.


கடலன்ன காதல்நோய் கொண்டாலும் மங்கை

மடலேறும் துன்பம் பொறுக்கும் பெருமை

உடைத்தவள் என்பதை வாழ்த்து.

குறள் 1138:

நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்

மறையிறந்து மன்று படும்.


வெள்ளந்தி என்றெல்லாம் எண்ணாமல்  காதலோ

இவ்வூர் தெரியவைக்கும் சாற்று.

குறள் 1139:

அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்

மறுகின் மறுகும் மருண்டு.


தெரியவில்லை யாருக்கும் காதலென்றே

இங்கே

தெருவெல்லாம் சுற்றுதோ சொல்.

குறள் 1140:

யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்

யாம்பட்ட தாம்படா ஆறு.


காதல்நோய் என்ன? அறியாதோர் தானே

காதல் துயர்பட்டோர் கண்டே நகைப்பார்!

காதலை ஊரறியார்! சாற்று.


















 

















0 Comments:

Post a Comment

<< Home