113 காதற் சிறப்புரைத்தல்
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
113 காதற் சிறப்புரைத்தல்
( காதலைச் சொல்லி மகிழ்தல்)
குறள் 1121:
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலேயி றூறிய நீர்.
அவளது பற்களில் ஊறிவரும் நீரோ
சுவைப்பாலும் தேனுமென்றும் செப்பு.
குறள் 1122:
உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு.
எங்கள் உறவோ உயிரும் உடம்பும்போல்
ஒன்றி இருக்கும் நிலை.
குறள் 1123:
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற் கில்லை யிடம்.
கண்மணிப் பாவையே போய்விடு! என்னவள்
தங்க இடம்வேண்டும் செல்.
குறள் 1124:
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.
மாதரசி கூடினால் இன்னுயிர் சேர்ந்ததுபோல்!
நீங்கினால் சாதலைப் போல்.
குறள் 1125:
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
என்னவள் பண்பை மறப்பதில்லை!
என்றுமறந்தேன்?
அன்பகத்தை நான்நினைக்க? செப்பு.
குறள் 1126:
கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்
நுண்ணியர்எம் காத லவர்.
என்னவர் கண்விட்டு நீங்கமாட்டார்! கண்ணிமைத்தால்
புண்படார்! நுட்பமான அன்பு.
குறள் 1127:
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து.
கண்ணுள்ளே அன்பருள்ளார்! மையிட்டால் போய்விடுவார்!
கண்மை போடமாட்டேன் நான்.
குறள் 1128:
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.
நெஞ்சில் இருக்கின்ற காதலரைச் சுட்டுவிடும்
என்றேதான் சூடாக உண்ண மறுக்கின்றேன்!
என்னவரைப் புண்படுத்தல் தீது.
குறள் 1129:
இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னுமிவ் வூர்.
இமைத்தால் மறைந்திடுவார்! இமைக்க மறுத்தேன்!
இதற்கவரை நோகிறதே ஊர்!
குறள் 1130:
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னுமிவ் வூர்.
இதயத்தில் வாழ்கின்றார்! ஊரார் அவரைப்
பிரிந்துவிட்டார் என்கிறாரே ஏன்?
0 Comments:
Post a Comment
<< Home