Saturday, January 30, 2021

115 அலர் அறிவுறுத்தல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

115 அலர் அறிவுறுத்தல்

குறள் 1141:

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்

பலரறியார் பாக்கியத் தால்.


எங்களது காதலை ஊரார்கள் பேசுவதால்

என்னுயிர் போகவில்லை யே.

குறள் 1142:

மலரன்ன கண்ணாள் அருமை அறியா

தலரெமக் கீந்ததிவ் வூர்.


மலர்க்கண் நாயகியின் காதலறி யாமல்

அலரால் உதவுதே ஊர்.

குறள் 1143:

உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்

பெறாஅது பெற்றன்ன நீர்த்து.


காதலைப் பேசுவாரா என்றிருந்தோம்! பேசுகின்றார்!

காதல் கனிவதற்கு வாய்ப்பு.

குறள் 1144:

கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்

தவ்வென்னும் தன்மை இழந்து.


பேசுகின்றார் ஊரார்! வளர்கிறது காதல்தான்!

பேசவில்லை என்றால் இழப்பு.

குறள் 1145:

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

வெளிப்படுந் தோறும் இனிது.


கள்ளைக் குடிக்க குடிக்க விரும்புவார்!

எல்லோரும் காதலைப் பேசும் பொழுதெல்லாம் 

உள்ளம் மகிழ்கிறது கேட்டு.

குறள் 1146:

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று.


எங்களது சந்திப்போ  கொஞ்சநேரம்! 

ஊர்ப்பேச்சோ

திங்களைப் பாம்புகொண்ட தைப்போல

ஊர்முழுதும்

சென்றதே செய்தி விரைந்து.

குறள் 1147:

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்

நீராக நீளுமிந் நோய்.


ஊர்ப்பேச்( சு) உரமாக தாய்ச்சொல் நீராக

காதல் வளர்கிறதே சாற்று.

குறள் 1148:

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்

காமம் நுதுப்பேம் எனல்.


அலர்மூலம் காதலைத் தாழிடலும் இங்கே

வளர்நெருப்பில் நெய்யிடலும் ஒன்று.

குறள் 1149:

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார்

பலர்நாண நீத்தக் கடை.


பலர்நாண உன்னைப் பிரியேன்நான் என்றார்!

அலருக்கேன் அஞ்சவேண்டும் நான்?

குறள் 1150:

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்

கௌவை எடுக்குமிவ் வூர்.


ஊரார் அலரெடுத்தார்! காதலர் ஏற்பதற்கோ

ஊருதவ வாய்த்தது வாய்ப்பு.
























0 Comments:

Post a Comment

<< Home