57 வெருவந்த செய்யாமை
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
57 வெருவந்த செய்யாமை
(அஞ்சத்தக்கன செய்யாதிருத்தல்)
குறள் 561:
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து.
குற்றத்தை ஆய்ந்தறிந்து தண்டித்தே மீண்டுமக்
குற்றம் தடுத்தல் அரசு.
குறள் 562:
கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.
வேகத்தைக் காட்டி வரம்பினை மீறாமல் நாடறிய மென்மையாய்த் தண்டனை
தந்திருந்தால்
நீடுவாழும் அந்த அரசு.
குறள் 563:
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
குடிமக்கள் அஞ்சும் கொடுங்கோலர் ஆட்சி
நெறிகெட் டழியும் இடிந்து.
குறள் 564:
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
மக்கள் வெறுக்கும் கொடுங்கோலர்
ஆட்சியோ
எக்கணமும் வீழும் அழிந்து.
குறள் 565:
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து.
காண வருவோரைப் பார்க்கத் தவிர்ப்பவன்
காண்போர் வெறுக்க கடுகடுக்கப் பேசுவோன்
பேணுகின்ற செல்வங்கள் வீண்.
குறள் 566:
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.
கடுஞ்சொல்லும் ஈரமற்ற உள்ளமுள்ள வேந்தன்
கொடுஞ்செல்வம் போகும் அழிந்து.
குறள் 567:
கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.
முறையற்ற தண்டனை மற்றும் கடுஞ்சொல்
நெறிமறந்த தீய அரசின் வலுவை
அழிக்கும் அரமாகும் சொல்.
குறள் 568:
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகுந் திரு.
கலந்தேதான் பேசாமல் வேந்தன் கோப
வழிநடந்தால் என்றும் அழிவு.
குறள் 569:
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
தற்காத்துக் கொள்ளாத வேந்தனுக்குப் போர்வந்தால்
எப்படியும் வீழ்வான் துவண்டு.
குறள் 570:
கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை.
கொடுங்கோல் அரசிங்கே கல்லாரை நம்பும்!
அதுவேதான் நாட்டின் சுமை.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home