Saturday, January 02, 2021

56 கொடுங்கோன்மை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

56 கொடுங்கோன்மை

குறள் 551:

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்

டல்லவை செய்தொழுகும் வேந்து.


மக்களை வாட்டும் அரசு, கொலைத்தொழில்

வக்கிரத்தைக் காட்டிலும் கேடு.

குறள் 552:

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு.


அரசு பொருளைப் பறிப்பதும் வேலால்

மிரட்டுகின்ற கொள்ளையனும் ஒன்று.

குறள் 553:

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

நாடொறும் நாடு கெடும்.


நாளும் நிகழ்வை கணிக்காமல்  ஆள்பவர்

நாட்டை இழப்பார் விரைந்து.

குறள் 554:

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்

சூழாது செய்யும் அரசு.


அரசின் அலட்சியம்   மக்களையும்  செல்வ

வளத்தையும் பாதிக்கும் பார்.

குறள் 555:

அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை.


ஆட்சிக் கொடுமையால் சிந்துகின்ற கண்ணீரோ

ஆட்சியைச் சீரழிக்கும் சொல்.

குறள் 556:

மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்

மன்னாவாம் மன்னர்க் கொளி.


ஆட்சிப் புகழுக்குக் காரணம் நேர்மையே!

நேர்மையில்லை  எப்புகழும் பாழ்.

குறள் 557:

துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்

அளியின்மை வாழும் உயிர்க்கு.


மழையில்லை, துன்பம் உலகுக்கே! நேர்மை

தழைக்காத ஆட்சியோ மக்களுக்குத் துன்பம்!

களையாகும் அவ்வாட்சி தான்.

குறள் 558:

இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா

மன்னவன் கோற்கீழ்ப் படின்.


ஏழ்மையில் வாழலாம்! செல்வந்த ராய்வாழ்தல்

பாழாம் கொடுங்கோலன் கீழ்.

குறள் 559:

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல்.


முறைதவறும் ஆட்சியில்  வான்மழை பொய்க்கும்!

பருவம் தவறும் தொடர்ந்து.

குறள் 560:

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்.


முறைதவறும் ஆட்சியில் ஆக்கமில்லை! சான்றோர்

அறநூல் மறப்பார் சொல்.





































0 Comments:

Post a Comment

<< Home