Friday, January 01, 2021

51 தெரிந்து தெளிதல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் விளக்கம்

51. தெரிந்து தெளிதல்

குறள் 501:

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறந்தெரிந்து தேறப் படும்.


அறம்பொரு ளின்பத்தை நேர்வழியில்

ஏற்று

நடப்பதற்  கஞ்சாத நல்லவரைப்

பார்த்துக்

கடமைசெய்ய தேர்ந்தெடுக்க லாம்.

 குறள் 502:

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்

நாணுடையான் கட்டே தெளிவு.


நற்குடும்பம் சார்ந்தவரை குற்றத்திற் கஞ்சுகின்ற

வல்லவரைத் தேர்ந்தெடுத்தல் நன்று.

குறள் 503:

அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்

இன்மை அரிதே வெளிறு.


கற்றறிந்த சான்றோரே ஆயினும் உற்றுநோக்கின்

சற்றே அறியாமை உண்டு.

குறள் 504:

குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.


குணமென்ன குற்றமென்ன பார்த்தே

இரண்டில் 

மிகைபார்த்தே தேர்ந்தெடுத்தல் நன்று.

குறள் 505:

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங்

கருமமே கட்டளைக் கல்.


பெருமைக்கும் சிறுமைக்கும் நற்செயல் தானே

உரைக்கல் லாகும் உணர்.

குறள் 506:

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

பற்றிலர் நாணார் பழி.


சுற்றத்தார் இல்லாரைத் தேர்வுசெய்தல் நல்லதல்ல!

சற்றும் அஞ்சார் பழிக்கு.

குறள் 507:

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்

பேதைமை எல்லாந் தரும்.


திறனற்றோர் என்றறிந்தும் அன்பின் நிமித்தம்

எடுத்தல் அறியாமை  யே.

குறள் 508:

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

தீரா இடும்பை தரும்.


ஆராய்ந்து தேர்ந்தெடுக்கா விட்டால் தலைமுறைக்கும்

தீராத துன்பங்கள் உண்டு.

குறள் 509:

தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்

தேறுக தேறும் பொருள்.


ஆராய்ந்து தேர்ந்தெடுத்தால் நம்பவேண்டும்! தேர்ந்தெடுத்துச் 

சேர்த்தபின் நம்பாமை தீது.

குறள் 510:


தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்.


ஆராய்ந்து பாராமல் நம்புவதும், நம்பியபின்

வேரோடும் சந்தேகம் கேடு.


மதுரை பாபாராஜ்




































0 Comments:

Post a Comment

<< Home