53 சுற்றந்தழால்
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
53 சுற்றந்தழால்
குறள் 521:
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.
ஒருவருக்கு ஏழ்மை நிலைவரினும் சுற்றம்
பழம்பெருமை பாராட்டும் சூழ்ந்து.
குறள் 522:
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்.
நிரந்தர அன்பளிக்கும் சுற்றம் அமைந்தால்
பெருகும் பலவளங்கள் தான்.
குறள் 523:
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
கரையின்றி நீர்நிறைந்த ஊர்க்குளம் போல
உறவுடன் வாழாதார் வாழ்வு.
குறள் 524:
சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்.
சுற்றத் துடன்வாழும் வாழ்க்கையே செல்வங்கள்
பெற்ற பயனாகும் செப்பு.
குறள் 525:
கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்.
ஈதலும் இன்சொலும் பண்பாக உள்ளவரைச்
சூழவரும் சுற்றம் விழைந்து.
குறள் 526:
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத் தில்.
கொடைப்பண்பும் கோபமும் இல்லான்போல் சுற்றம்
உடையோன் உலகிலில்லை சாற்று.
குறள் 527:
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
காகம் அழைத்துண்ணும் சுற்றத்தை! அப்பண்பை
வாழ்வில் உடையோர்க்(கு) உயர்வு.
குறள் 528:
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
பொதுவாக நோக்காமல் ஆற்றலுக் கேற்ப
மதிக்கும் அரசனைச் சுற்றமாய்ச் சூழ்வார்!
மதிக்கவேண்டும் ஆற்றலைப் பார்த்து.
குறள் 529:
தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரண மின்றி வரும்.
சுற்றம் பிரிந்தாலும் மீண்டும் உணர்ந்ததும்
பற்றுடன் வந்துசேர்வார் பார்.
குறள் 530:
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந் தெண்ணிக் கொளல்.
பிரிந்தவர்கள் மீண்டும் வரும்போதோ ஆய்ந்தே
விரும்பவேண்டும் நட்பைத்தான் இங்கு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home