Saturday, January 02, 2021

கவிஞர் பாலாவின் சங்கச் சுரங்கம்!

 பாலாவுக்கு வாழ்த்து!

கவிஞர் பாலாவின் சங்கச் சுரங்கம்!


மூன்றாம் பத்து 02.01.21

தலைப்பு ஓதம் சுற்றிய ஊர்.

சுந்தர் அறிமுகமும் அன்பு வரவேற்பும்

சங்கச் சுரங்கத்தின் முத்து.


சங்க இலக்கியப் பூங்கா மலர்களில்

வண்டாய்ப் பறந்துசென்றே தேன்துளியைத் தான்மட்டும்

உண்டு மகிழாமல் கேட்போர் செவிகளுக்கும்

தந்தநண்பர் பாலாவை வாழ்த்து.


ஓதமென்றால் என்னவென்றும் பின்னணி வாழ்க்கையை

ஈடற்ற பாணியில் நன்கு விளக்கினார்!

ஆகச் சிறந்த கருத்துகளை முன்வைத்தார்!

நாமறிந்தோம் செய்திகளைத் தான்.


தூரிகை வேந்தர் டிராட்ஸ்கி மருதுவின்

ஓவிய ஆற்றலில் மாமதுரைப் பின்னணி

ஓவியம் அற்புத மாக வலுவூட்ட

பாவியம் கேட்டோம் விழைந்து.


தலைப்பில் புதுமை! அணுகு முறயில்

நிலைகொள்ளும் பேச்சில் விறுவிறுப்பு என்றே

மலைக்கவைக்கும் பாலாவின் ஆற்றலை வாழ்த்து!

தழைக்கட்டும் சங்கத்தின் பேச்சு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home