Monday, February 01, 2021

120 தனிப்படர் மிகுதி

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

120 தனிப்படர் மிகுதி

குறள் 1191:

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே

காமத்துக் காழில் கனி. 


தலைவியை ஏற்கும் தலைவன் அமைந்தால்

விதையில்லா நற்கனி பெற்ற பேறு!

சுவையாகும் காதல் கனி.

குறள் 1192:

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

வீழ்வார் அளிக்கும் அளி.


காதலர்கள் அன்பைப் பொழிதல்

பருவத்தில் 

வான்மழை வாழ்வார்க்குப்  போல்.

குறள் 1193:

வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே

வாழுநம் என்னும் செருக்கு.

விரும்புவாரை இங்கே விரும்பினால் காதல்

செருக்குடன் காணலாம் வாழ்வு.

குறள் 1194:

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்

வீழப் படாஅர் எனின்.


தலைவி விரும்பி தலைவன் வெறுத்தால்

சுவரற்ற சித்திரம்போல் வாழ்வு.

குறள் 1195:

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ

தாம்காதல் கொள்ளாக் கடை.


காதலித்தேன் காதல் மறுத்தார்! எப்படி

வாழ்வில்  தழைக்கும் மகிழ்வு?


குறள் 1196:

ஒருதலையான் இன்னாது காமங்காப் போல

இருதலை யானும் இனிது.


ஒருதலைக் காதல் துயரம்! காதல்

ஒருதண்டில் காவடிபோல் பக்கம் இரண்டும்

சரிசமக் காதலே நன்று.

குறள் 1197:

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்

ஒருவர்கண் நின்றொழுகு வான்.


காமன் ஒருவரிடம் உள்ளதால் காதல்நோய்

வாட்டி பசலையால் என்னைத் துன்புறுத்திப்

பார்ப்பதைக் கண்டுகொள்ளா ரோ?

குறள் 1198:

வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து

வாழ்வாரின் வன்கணார் இல்.


தான்விரும்பும் காதலர் இன்சொல்லால்

போற்றவில்லை!

காதலர் கல்நெஞ்சமோ? சொல்.


குறள் 1199:

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்

டிசையும் இனிய செவிக்கு.


அன்பருக்கு என்மீது அன்பில்லை என்றாலும்

அன்பரின் சொற்கள் இனிது.

குறள் 1200:

உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்

செறாஅஅய் வாழிய நெஞ்சு.


நெஞ்சேஉன் துன்பத்தை அன்பரிடம்  சொல்வதினும்

அக்கடலைத் தூர்த்தல் எளிது.





















0 Comments:

Post a Comment

<< Home