நிம்மதி கானலே!
நிம்மதி கானலே!
ஓடுகிறேன் ஓடுகிறேன் காரிருளில் ஓடுகிறேன்!
கோடுகளைக் காணவில்லை தேடித்தான் ஓடுகிறேன்!
நாடுகின்ற நிம்மதியைத் தேடித்தான் ஓடுகிறேன்!
தேடுகின்ற நிம்மதியோ கானலாக ஓடுகின்றேன்!
காடுமேடு சுற்றி நெடுஞ்சாலை மீதுதான்
ஓடுகிறேன் ஆகா தொடுவானம் நோக்கித்தான்
ஓடுகிறேன் நிம்மதி தொட்டுவிடும் தூரமென்றே
ஓடுகிறேன் ஆனால் தொடுவானம்
ஓடுதிங்கே!
காணும் தொடுவானம் நானோ தொடவில்லை!
கானல்தான் நிம்மதி யோ?
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home