எத்தனை நாளோ?
எத்தனை நாளோ?
எனக்கு நிம்மதி தருவாயா
இல்லை
நிலைகுலை யத்தான் வைப்பாயா
உள்ளம் குமுறிக் கொதிக்கிறது
உடலோ பற்றி எரிகிறது
நிம்மதி எங்கே நிம்மதி எங்கே
தேடித் தேடி அலைகின்றேன்
அருமை யான பிள்ளை பெறவே
என்னதவம் செய்தனர் பெற்றோர்கள்
என்றே சொன்னார் வள்ளுவர்தான்
பண்பைப் பொறுத்தே தவமென்றார்!
வாழ்ந்தால் என்ன பெற்றோர்கள்
வீழ்ந்தால் என்ன பெற்றோர்கள்
என்றே நினைப்பவரைப் பெற்றால்
வரமா? சாபமா? என்சொல்வேன்?
எத்தனை நாளோ? எத்தனை நாளோ?
எங்களுக் கிந்த சோதனைகள்?
எத்தனை நாளோ? எத்தனை நாளோ?
எங்களுக் கிந்த வேதனைகள்?
சித்தம் கலங்கித் தவிக்கின்றேன்!
நிம்மதி தேடி அலைகின்றேன்!
வாழ்நாள் முடியும் நாளெதுவோ?
முடியும் நாளே நிம்மதிதான்!
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home