வேடதாரிகள்
வேடதாரிகள்!
இருக்கும் பொழுதில் இடிபோல் முழங்கி
கருத்தில் முரணென்றே சாடித்தான் பேசி
பெரும்புள்ளி யெல்லாம் கரும்புள்ளி ஆவார்!
தரமிழந்தே பேசுவார் தாழ்ந்து.
இறந்ததும் ஓடோடி வந்தே அழுவார்!
இறந்ததோ நாட்டிற்குப் பேரிழப்பே என்பார்!
குறைகூறிக் கூழாங்கல் என்றவரோ
அம்மா!
மறைந்தவுடன் மாணிக்கம் என்பார் புகழ்ந்து!
நகைத்திருக்கும் உள்மனந் தான்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home