Monday, December 06, 2021

திரு.V.S. முத்து வீரகுமார் அவர்களுக்கு மணிவிழா வாழ்த்து


திரு.V.S. முத்து வீரகுமார் அவர்களுக்கு மணிவிழா வாழ்த்து

மனைவி திருமதி M.சரோஜா 

நாள் 07.12.2021 

இடம்: திருவானைக் காவல்


சீத்தாராம் இந்திரா என்ற இணையரிங்கே

போற்றுகின்ற மைந்தனாக பெற்றெடுத்தார் நம்குமாரை!

ஆற்றலுடன் முன்னேறி நற்பணிகள் செய்கின்றார்!

ஏற்றமுடன் வாழ்கபல் லாண்டு.


ஆன்மிகப் பற்றாளர்! அன்பு பணிவுடன்

தானுண்டு தன்வேலை உண்டென்றே வாழ்பவர்!

காணும் இடமெல்லாம் புன்னகை பூத்தேதான்

பாங்குடன் பேசுகின்ற பண்பாளர்! பாவலர்!

மாண்புடன் வாழ்க மகிழ்ந்து.


இல்லறத்தில் நல்லறத்தைப் போற்ற சரோஜாவை 

இல்லாளாய் ஏற்று  மனைமாட்சி காணுகின்றார்!

இன்று மணிவிழா காணும் குமாரிங்கே

இன்பமுடன் வாழ்க சிறந்து.


மகளும் மருமகனும் வாழ்வாங்கு வாழ்க!

அகங்குளிர பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து!

சிறப்புகள் பெற்றே வளமுடன் வாழ்க!

உறவுகள் சூழ்ந்திருக்க வாழ்கபல் லாண்டு!

நிறைவுடன் வாழ்க இணைந்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்.

 

0 Comments:

Post a Comment

<< Home