பறவைகள்தானே
பறவைகள்தானே!
பறவைகள் கூடுகட்டி வாழ்ந்திருந்த தோப்பைத்
தரைமட்ட மாக்கி அடுக்ககம் கட்டிக்
குடியேறி வாழ்கின்றோம்! மாந்தரா? சாலை
மறியல்கள் செய்ய? பறவைகள் தானே!
பறவைகள் வீட்டுக்குள் வந்தால் நமக்குத்
தடையாக உள்ளதென்றே சாளரத்தை மூடி
அடைக்கின்றோம் அச்சமுடன் இன்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home