IG சேகர்- தமிழச்சி தங்கபாண்டியன் மகள் திருமணம்மகள்
திருமணம்
வந்தோம்! பார்த்தோம்! மகிழ்ந்தோம்!
தலைமை:
மாண்புமிகு முதல்வர்
மு.க.ஸ்டாலின் அவர்கள்
மணமக்கள் வாழ்க வளமுடன்!
மணமகள்: Dr.நித்திலா சந்திரசேகர்
மணமகன்: Dr.கீர்த்தன் மகேந்திரன்
மணநாள்: 09.03.2022
இடம்: இராமச்சந்திரா கன்வென்ஷன் ஹால்,திருவான்மியூர்
அரங்கத்தின் உள்ளே நுழைவ தற்கே
அடிமேல் அடியெடுத்து வைத்தே நடந்தோம்!
இருக்கைகள் எல்லாம் விருந்தினர் கூட்டம்!
ஒருவாறாய் நண்பர் இடம்பிடித்தார் அங்கே!
இருக்கையில் உட்கார்ந்தோம் பார்த்து.
நிகழ்வுகள் எல்லாம் அரங்கேறக் கண்டோம்!
முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் தலைமை!
அகங்குளிர அங்கே மணமக்கள், சுற்றம்
முகம்மலர இல்லறம் ஏற்றார் மகிழ்ந்து!
நடத்திவைத்தார் ஸ்டாலின் உவந்து.
மேடைக்குப் போக விழைந்தோம் முடியவில்லை!
ஆகா! உணவருந்தச் சென்றோம் விரும்பித்தான்!
பாகாய் உருகவைத்தார் வாழை இலையிலே
பாங்காய் வகைவகையாய்த் தந்தார் உணவுகள்!
வேண்டுமட்டும் உண்டோம் சுவைத்து.
அற்புத மான அழகான ஏற்பாடு!
நற்றமிழ் நண்பராம் சந்திர சேகரனின்
நட்பில் திளைப்பதே வாழ்வின் வரம்தானே!
முத்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
இமய வரம்பனின் நட்பில் திளைத்தோம்!
அவரிடமும் சண்முக நாத னிடமும்
விடைபெற்று நாங்கள் புறப்பட்டோம் அங்கு!
நினைவைச் சுமக்கின்றோம் இங்கு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
0 Comments:
Post a Comment
<< Home