Saturday, March 05, 2022

வேற்றுமை தவிர்

 

வேற்றுமை தவிர்!

அற்புதம் என்று நினைப்பதைப் பார்த்தேதான்

அற்பமென்றே எண்ணும் மனப்போக்கால் வேற்றுமை

சுற்றிப் படர்கிறது தேவையே இல்லாமல்!

அற்புதம் என்றே இணக்கமாய் வாழ்த்தினால்

தொற்றாது வேற்றுமை சொல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home