ஐந்திணை
ஐந்திணை!
மலைகள் மலைசார்ந்த சூழல் குறிஞ்சி!
கடல்கள் கடல்சார்ந்த சூழலோ நெய்தல்!
கழனி கழனிசார்ந்த சூழல் மருதம்!
அடர்வனம் காடுசார்ந்த சூழலோ முல்லை!
குறிஞ்சியும் முல்லையும் பின்னியதே பாலை!
நெறிப்படுத்தி ஐந்திணை என்றார்கள் முன்னோர்!
முறைப்படுத்தி வாழ்ந்திருந்தார் அன்று.
முறையற்ற வாழ்வின் அணுகு முறையால்
கறைபடிந்து மாசாகி வாழும் உயிர்கள்
குறைகளுடன் தத்தளிக்கும் வாழ்நிலை பெற்றார்!
தடைகளுடன் மண்ணுலக வாழ்வு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home