ராஜா வீட்டு விருந்தோம்பல்
ராஜா வீட்டு விருந்தோம்பல்!
இல்லற முத்துக்கள்:
மனைவி திருமதி கண்மணி ராஜா--
மகள் செல்வி உதயஸ்ரீ
மகன் செல்வன் குமார்.
மகிழுந்தில் ராஜா மகளும் மகனும்
அகங்குளிர வந்தே வசந்தாவை என்னை
முகம்மலரப் பார்த்தே அழைத்தேதான் சென்றார்!
அடைந்தோம் அகத்தை மகிழ்ந்து.
ராஜாவின் இல்லாளின் பண்பு விருந்தோம்பல்
ஈடற்ற அன்பின் அடையாள மானதே!
ஈகையும் ஈரமும் உள்ளத்தில் ஊறிவர
தோகை விரித்ததே செப்பு.
பூப்போன்ற இட்லியுடன் தக்காளி சட்னியும்
தேங்காய் மணக்கின்ற சட்னியும் சாம்பாரும்
பாங்குடன் வைத்தார்! ருசியாக சாப்பிட்டோம்!
ஏங்கித் தவிக்கும் வயிறு.
அமைதியான நல்ல குழந்தைகள் சூழ
குணவதி இல்லாள் முகம்மலர ராஜா
சிரிக்கும் சிரிப்பில் மெய்மறந்து நாங்கள்
அளிக்கின்றோம் நன்றி மகிழ்ந்து.
மதுரை பாபாராஜ்
வசந்தா
0 Comments:
Post a Comment
<< Home