கடல்மட்டம் உயருமாம்!
வெள்ளைப் பனிப்பொழிவில் எங்கள் இமயமலை
கொள்ளை அழகே! உருகாத மட்டுமே!
வெப்பம் உருக்கிக் கரையவைத்தால் அச்சந்தான்!
வெப்பமய மாகி உருகக் கடல்மட்டம்
அய்யோ உயரத் தொடங்க நகரங்கள்
தண்ணீரில் மூழ்கி மறையுமாம் என்செய்வோம்?
எல்லையை மீறினால் தொல்லை நெருங்கிவரும்!
தொல்லை வராதென்றே நம்பு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home