உற்சாகம் ஊக்கத்தை இழக்காதே
உற்சாகம் ஊக்கத்தை இழக்காதே!
போர்க்களத்தில் வெற்றி நடைபோடும் யானையை
தார்வேந்தன் கண்ணுங் கருத்துமாய் காத்துவந்தான்!
யானை முதுமைப் பருவத்தை எட்டியது!
பார்வேந்தன் யானைக்கு ஓய்வை அளித்துவிட்டான்!
யானை புதைகுழியில் சிக்கித் திணறியது!
யாராலும் காக்க முடியவில்லை! வேந்தனும்
வேதனையில் பார்த்தார் துயர முகத்துடன்!
யானை துடித்ததே அங்கு.
அந்ததேரம் ஓய்வுபெற்ற வீரர்தான் அங்குவந்தார்!
மன்னரிடம் போர்க்கள நாதம் முழக்குங்கள்
என்றுசொன்னார்! ஏற்பாடு செய்தார்! முழங்கியது!
அந்தநாதம் கேட்டிருக்க யானை சகதியை
விட்டே திமிறித்தான் வந்தது தப்பித்து!
நம்முடைய வாழ்விலும் சிக்கலான நேரத்தில்
உற்சாகம் ஊக்கத்தை நாமிழக்கக் கூடாது!
சந்தித்தே வெல்லவேண்டும் செப்பு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home