புரையேறுதல்
புரையேறுதல்!
தண்ணீர் குடிப்போம்! குடிக்கின்ற நேரத்தில்
தண்ணீர் ஒருதுளி மூச்சுக் குழல்வழியே
சென்றுவிட்டால் திக்கித் திணறுகிறோம் நாமிங்கே!
என்றுவரும்? எப்பவரும்? யாரும் அறியமாட்டார்!
வந்திருக்கும் சூழ்நிலைகள் தென்றலென வாழ்ந்திருப்போம்! வன்புயலாய்த் துன்பம் புரையாய்த் திணறவைக்கும்
நம்முடைய வாழ்வில் உணர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home