நாணயத்திற்கு இருபக்கம் !
நாணயத்தைப் பார்த்தால் இருபக்கம் உள்ளதுபோல்
நாடுகளின் சிக்கலுக்கும் பார்வை இரண்டுண்டு!
ஓரணி கூறுவதை மற்றொன்றோ ஏற்காது!
வீடுகளில் உள்ள குடும்பமும் இப்படித்தான்!
நாடறிய மக்களும் இப்படித்தான்! எல்லோரும்
கூடுகளை நோக்கிப் பறப்பார் முடிவின்றி!
வேடமற்ற பார்வை? புதிர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home