பொன்மல்லிகை மருத்துவமனை மருத்துவருக்கு நன்றி!
இருமல் சளியுடன் காய்ச்சல் உணர்வும்
ஒருங்கிணைந்தே தாக்க மருத்துவரை நாடி
மருந்துகளை உட்கொள்ள லானேன்! இருந்தும்
இருமலோ அல்லையில் ஏற்படுத்தும் நோவும்
இருமூக்கில் எப்ப வருமோ என்றே
பெருக்கெடுத் தோடும் சளியும் வதைக்க
மருந்துடன் போராட்டந் தான்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home