Monday, November 13, 2023

திட்டினால் கோபிக்க வேண்டாம்



 திட்டினால் கோபிக்க வேண்டாம்!


நாயெனத் திட்டினால் நன்றி யுடையவர்

நேயமனம் கொண்டவர் என்றே பொருளாகும்!


கழுதையெனத் திட்டினால் வீட்டுக் கடமை

சுமப்பவன் என்று பொருளாகும் நண்பா!


மாடெனத் திட்டினால் நாள்தோறும் பால்தந்தே

காப்பவர் என்றே பொருளாகும் நண்பரே!


எருமையெனத் திட்டினால் கோபப் படாதே!

பொறுமைக் கெருமை எனச்சொல்வார் நண்பா!


திட்டினால் திட்டட்டும் நேர்மறையாய் எண்ணுவோம்!

திட்டுக்குத் திட்டே பகைவளர்க்கும் வாழ்க்கையில்!


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home