Tuesday, December 31, 2024

விஜயா பிரிண்டர்ஸ் 78


 விஜயா பிரிண்டர்ஸ் 78!

மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம்

அவர்களுக்கு வாழ்த்து!


நேர்மை கடமை உழைப்புடன் நாணயம்

வேர்களாக ஊன்ற விஜயா பிரிண்டர்சார்

ஊர்மெச்ச அச்சுத் தொழிலை நடத்துகின்றார்!

பார்போற்ற வாழ்க வளர்ந்து

பண்பாளர் சொக்கலிங்கம் காட்டும் அணுகுமுறை

எந்நாளும் வாடிக்கை யாளர் திருப்தியுடன்

வந்துபோகும் நல்லுறவே அச்சகத்தின் முன்னேற்றம்!

புன்னகை பூக்கும் தொழிலாளர் 

அன்புடன்

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

எழுபத்து எட்டாவ தாண்டில் விஜயா

பிரிண்டர்ஸ் அடியெடுத்து வைக்கின்ற பொன்னாள்!

வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

என்றும் நன்றியுடன்

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home