பெற்றோர் கடமை
பெற்றோர் கடமை!
காதல் புரிந்து மனத்தாலே ஒன்றியோர்
வாழ்வில் கடிமணம் செய்தேதான் இல்லறத்தை
ஏற்று மகிழ்வாராம் பிள்ளைகள் பெற்றெடுப்பார்!
மோதல் கருத்துகள் வேற்றுமை என்றேதான்
வேதனை வாழ்வாக விட்டுப் பிரிவாராம்!
வாழ்க்கையா? இல்லை விளையாட்டா? சொல்வாரா?
வாழவந்த பிள்ளைகள் என்ன பலியாடா?
வாழ்க்கையில் பிள்ளைகளைப் பேணிப் பராமரித்தல்
பாரிலே பெற்றோர் கடன்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home