Sunday, April 27, 2025

பாவா முத்துவீரன் நினைவுநாள்


 பாவா முத்துவீரன் அவர்களின் நினைவுநாள்!


நினைவேந்தல்: 28.04.


ஓவியத்தை பாவா வரைந்திடுவார்! நானளிக்கும்

பாவியத்தை நன்கு எழுதிடுவார் அங்கொரு

காவியம் தோன்றிடும்! வாழ்த்து மணங்கமழும்!

பாவா அளித்தநல்ல ஊக்கமும் உற்சாகத்

தூண்டலும் ஆர்வத்தின் வித்து


அவரில்லை என்ற துயரிருந்த போதும்

அவரின்  குடும்பமோ  அக்காவின் தூண்டல்

துலங்கலால் நான்கு மகன்களும் தங்கள்

குடும்பத்தார் சூழ அறநெறி வாழ்வில்

வளமுடன் வாழ்கின்றார்! வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

வசந்தா 

குடும்பத்தார்


கலங்கி நின்ற எங்களுக்கு கட்டுமரமாய், கலங்கரை விளக்காய் நாங்களிருக்கிறோம் என்றே வழி நடத்தி வாழ்வில் வளம் பெறச் செய்த எம் அம்மான்களின் பாதம் பணிகிறோம் என்றும் நன்றியுடன்.🙏🙏

மு.சரவணப்பெருமாள்

திண்டுக்கல்

0 Comments:

Post a Comment

<< Home