குறுந்தொகை 2
குறுந்தொகை
பாடல் 2- இறையனார்
கூந்தல் நறுமணம் இயற்கையா?
குறிஞ்சி - தலைவன் கூற்று
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறி யெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.
--------------------------------------------------------------------------------------
எண்ணற்ற பூக்களின் பூந்தாதை தேடியுண்ணும்
தும்பியே! வேண்டுமென்றே கூறாமல் நீநுகர்ந்த
வண்ண மலரின் நறுமணத்தில் என்தலைவி
அன்பரசிக் கூந்தல் நறுமணம்போல் உள்ளதோ?
வண்டே! வந்துநீ என்னிடம் சொல்வாயா?
உன்னைத்தான் கேட்கிறேன் சொல்.!

0 Comments:
Post a Comment
<< Home