தஞ்சாவூர் பொம்மை
தஞ்சாவூர் பொம்மை
தஞ்சா ஊரு பொம்மைதான்
தலையை ஆட்டும் பொம்மைதான்!
எந்தப் பக்கம் சாச்சாலும்
எழுந்து நிற்கும் பொம்மைதான்!
வண்ண வண்ண பொம்மைதான்!
வடிவம் உள்ள பொம்மைதான்!
கண்ணைக் கவரும் பொம்மைதான்!
கருத்தில் நிலைக்கும் பொம்மைதான்!
எந்தத் திசையில் விழுந்தாலும்
எழுந்தே நிற்போம் பொம்மைபோல்!
நம்பி வாழ்வோம் உலகத்தில்
நாளை வெற்றி நமதாகும்!
மதுரை பாபாராஜ்
2005
முதல் இரண்டு கண்ணியில்தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை பற்றிய செய்தி
மூன்றாம் பகுதி மிக ஆழமானது அதே சமயத்தில் எளிமையானது குழந்தைகளுக்கு மனதில் எளிதாகப் பதியக் கூடியது
பம்பரமும் அப்படியே
மனித வாழ்க்கையை எளிதாகப் படம் பிடிக்கிறது ஆடி அடங்கும் வாழ்க்கை என்பதற்கு பம்பரத்தின் சுழற்சி எடுத்துக்காட்டு
சி ஆர்
பாபாவின் பாட்டெல்லாம்
பொம்மை பாட்டல்ல..அவை
உம்பர்களாலும் போற்றப்படுபவை.
தென்காசி கிருஷ்ணன்
குறள்நெறிக் குரிசில்
0 Comments:
Post a Comment
<< Home