Thursday, December 18, 2008

பாவம்! பரிதாபம்!

நரைவிழுந்த மூதாட்டி
நடுத்தெருவில் நிற்கின்றாள்!
அரைவயிற்றுக் கஞ்சிக்கே
அங்குமிங்கும் அலைகின்றாள்!

வீடுவீடாய்ச் செல்கின்றாள்!
விழியேங்கக் கேட்கின்றாள்!
கூடிழந்த வாழ்க்கையிலே
கூசித்தான் நடுங்குகின்றாள்!

உற்றார்கள் இருப்பாரோ?
உறவினர்கள் இருப்பாரோ?
பெற்றபிள்ளை இருப்பாரோ?
பிழைசெய்தோர் யாரிங்கே?

எப்படித்தான் வாழ்ந்தவளோ!
இப்படித்தான் ஆகிவிட்டாள்!
நற்கதியை இழந்தேதான்
நாள்தோறும் தவிக்கின்றாள்!

பாவமாக இருக்கிறது!
பாழுமனம் துடிக்கிறது!
ஆனமட்டும் தருகின்றோம்!
ஆனாலும் கொடுமையிது!

மதுரை பாபாராஜ்
2005

0 Comments:

Post a Comment

<< Home