Sunday, October 11, 2009

கோழித் தூக்கம்

=====================
மத்தியான நேரத்தில் தூங்க முயன்றேதான்
அப்பாடா! என்றே படுத்திருந்தேன்!-- அப்போது
வந்து மணியடித்தார்!தூதஞ்சல் கொண்டுவந்தார்!
தந்துவிட்டுச் சென்றார்!விரைந்து.

மீண்டும் விழிமூடித் தூங்க முயன்றேதான்
மீண்டும் படுத்தேன்!மணியடித்தார்!--ஊன்றி
எழுந்தேதான் சென்றேன்!முகவரி கேட்டார்!
ஒருவாறு சொன்னேன் ஒடிந்து.

மறுபடியும் வந்து படுத்தேன்!அயர்ந்தேன்!
மறுபடியும் அங்கே மணியடித்தார் அன்பர்!
சமையல் எரிவாயு வந்ததென்றே தந்தார்!
இமைமூட நான்முயன்றேன்!இங்கு.

தொலைப்பேசி அங்கே அடித்தது!சென்றேன்!
வலைவீசும் வங்கியின் திட்டத்தை மங்கை
உரைநடை ஆங்கிலத்தில் சொன்னாள்!பொறுத்து
சிலைபோல் கேட்டிருந்தேன் பார்.

மத்தியான நேரம் மனங்குமுறும் கோணத்தில்
இப்படித் தேடிவந்தே கொட்டும் இடையூறில்
எப்படி மக்கள் தொடர்ந்தே உறங்கிடுவார்?
இப்படித்தான் வாழ்கின்றோம் நாம்.

--மதுரை பாபாராஜ்

1 Comments:

Blogger cheena (சீனா) said...

உண்மை உண்மை - மதியம் அயர்ந்து தூங்கச் செல்லும் போது இது மாதிரி இடைஞ்சல்கள் இருக்கத்தான் செய்கின்றன - என்ன செய்வது - தவிர்க்க இயலவில்லையே

1:48 AM

 

Post a Comment

<< Home