Thursday, July 21, 2011

நடைபாதைக் கடைகளை நீக்கு!

=============================

நடைபாதை எல்லாம் கடைகளை வைத்தே
அடைத்துவிட்டால் நாளும் நடப்பதுதான் எங்கே?
முறைப்படுத்தப் போனால் மறியலில் மக்கள்
படையெடுத்துக் கூடுவார் பார்.

சட்டத்தை நாளும் மதித்து நடக்கவேண்டும்!
முற்றும் புறக்கணித்து வாழ்தல் ஒழுக்கமா?
சற்றேனும் சிந்தித்தால் நல்ல விடைகிடைக்கும்!
மற்றவர்க்கும் வாழ்வுரிமை உண்டு.

நடைபாதை எல்லாம் பொதுமக்கள் சொத்து!
தடைபோட்டு மற்றவர்கள் இங்கே நடக்க
இடையூறு செய்தல் இழிசெயல் ஆகும்!
தடைகளை நீக்கவேண்டும் சாற்று.

மதுரை பாபாராஜ்

1 Comments:

Anonymous Anonymous said...

முதல்ல நம்மைத் திருத்திக்கொள்ளேணும்.

இவங்க ஏன் போய் நடைப்பாதை வியாபாரிகளிடமிருந்து பொருட்கள் வாங்க வேண்டும்? இவங்க ந.பாதைக்காரன் குறைந்த விலையில் கொடுப்பான் - அவன் மலிவானப்பொருளைத்தான் விற்பான் !- என்று தெரிந்தே நீங்க போய் வாங்குறீங்க. இல்லையா ?

தப்பு ரெண்டு பக்கமும்.

போகட்டும்.

இதைத் தப்பாகப் பார்க்காமல் வேறுவிதமாகவும் பார்க்கலாம். அதாவது ஒரு அவசியம். ந.பாதைக்கடைகள் அவசியம். அல்லது, அவர்களிடமிருந்து மலிவு விலையில் சில பொருட்களை நீங்க வாங்குவது அவசியமாகி விடுகிறது உங்களுக்கு. இப்போ என்ன செய்யனும்.

ஒரு வழி உண்டு. ந.பாதை விகளுக்கென்று ஒரு தெரு வைத்துவிடவேண்டும். அஃது ஒரு பெரும் அங்காடித்தெருவுக்குப்பக்கத்திலிருப்பது வசதி. மக்கள் அங்கும் இங்கும் போக வசதி.

இது ஒன்னும் பெரிய ஒரிஜனல் ஐடியா இல்ல. பிறநாடுகளில் உண்டு.

In UK, it s called Flea Market where u can buy all kinds of items, first, second or third hand too, in affordable prices. Such market is close to the big bazaars. No vehicular traffic allowed. People can jaywalk as in a picnic, haggle and buy to their hearts' content. It s an interestign experience.

Similar flea market is in Jan path in New Delhi. A lane has been reserved for pavement vendors. It s frequented by students and low income groups.

In Madras (now called Chennai), u got a Moore Market, a flea market. It gave both good and bad names to the city.

Now it s gone! And we r left with Tamil poets who condemn flea markets !

6:20 AM

 

Post a Comment

<< Home