ஏசுநாதர்
அனைவருக்கும் உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் =============================================== 25.12.2011 =================================================
ஆணவத்தின் வேரறுக்க வானரசின் வாரிசாக
தேனகத்து ஏசுநாதர் மாட்டுத் தொழுவத்தில்
வானகத்து தேவதூதர் சூழ அவதரித்தார்!
தேன்மழழைச் சித்திரத்தைப் பார்.
எண்ணற்ற சோதனைகள் பின்தொடர வாழ்ந்தாலும்
பண்புடனே சாதனையாய் மாற்றினார் ஏசுநாதர்!
நன்னெறியில் மக்கள் அமைதியாய் வாழ்வதற்கே
இன்னல்கள் ஏற்றார் உவந்து.
சிலுவையைத் தோளில் சுமக்கவைத்துப் பார்த்தார்!
அழுக்குமன மூடர்கள் கல்லறையில் வைத்தே
பெருங்கல்லால் மூடினார்! மூனறாம்நாள் ஆகா!
பெருமகனார் அங்கே உயிர்த்தெழுந்தார்! நீசர்
விழுந்தடித்தே ஓடினார் அங்கு.
மாசற்ற ஏசுநாதர் காட்டுகின்ற நன்னெறியை
நேசமுடன் பின்பற்றி வாழ்வில் உழைத்திடுவோம்!
ஈடற்ற நற்பண்பை நாளும் கடைப்பிடிப்போம்!
பாடுபட்டால் நற்பலன் உண்டு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home