Friday, March 02, 2012

குறுந்தொகைப் பாடல்காட்சி:213=============================

மரப்பட்டை தன்னைக் ஞெரேரென்(று) உதைத்துக்
கலைமான் வளைத்துக் கொடுத்திட, குட்டி
சுவைத்தேதான் உண்டது போகவே மிஞ்சும்
கிளையையே உண்டு பசிதீர்க்கும் தாய்மான்!
நிழலாக நின்று வெயிலின் கொடுமை
நெருங்காமல் காத்திருக்கும் பார்.
============================================

குறுந்தொகைப் பாடல்காட்சி:233
==============================
கவலைக் கிழங்குகளைத் தோண்டிய தாலே
குழிகள் அகன்றிருக்கும் வாயுடன் பார்க்கும்!
மிளிர்கின்ற கொன்றை மலர்கள் அதற்குள்
பரப்பிவைத்த காட்சியோ செல்வந்தர் பேழை
நிரப்பிய பொன்னுடன் மூடியைத் திறந்த
நிலைபோல் இருக்கிறது காண்.

0 Comments:

Post a Comment

<< Home