Sunday, October 16, 2016

மனக்குறள்

அகரவரிசை



உளந்தன்னில் மாசின்றி வாழ்ந்தால் உயர்வு!
களங்கம் சுமத்தலே தாழ்வு.

ளா

களாக்காய்க் கிடைத்ததில் இன்புறுவோம்! எட்டாப்
பலாக்காய்க் கேங்காதே நீ.

ளி

உளியின் ஒலியில்  சிலைகள் மலரும்!
மழையொலி கேட்டால் வளம்

ளீ

பளீர்பளீர் என்றேதான் மின்னல் அடிக்கும்!
திடீர்திடீர் அச்சத்தில் நாம்.

ளு

வெளுத்ததெல்லாம் பாலல்ல! இவ்வுலகில் கண்ணே!
கருத்ததெல்லாம் நீரல்ல பார்.

ளூ

உள்ளூரில் வாய்ப்பில்லை! எங்கே வருமானம்
உள்ளதோ நாடல் இயல்பு.

ளெ

சுள்ளெனச் சுட்டெரிக்கும் பாலையில் நீர்கண்டால்
துள்ளிக் களிக்கும மனம்

ளே

வெள்ளை வெளேரென்றே ஆடை அணிந்துகொண்( டு)
உள்ளம் கருப்பென்றால் வீண்.

ளை

களைகள் பயிருக்குக் கேடு! பகையோ
களைபோல் உறவுக்குக் கேடு.

ளொ

முள்ளொன்று சிங்கத்தைத் தைக்க  எலிவந்து
முள்ளை எடுத்ததாம் பார்.

ளோ

கோளோடு கோள்மோத வில்லை!  மனிதர்கள்
தோளோடு தோள்மோதல் ஏன்?

ளௌ

ளௌக்கியம் என்றால் தெலுங்கில் நடப்பறிந்து
நட்புடன் இங்கே பழகு.

0 Comments:

Post a Comment

<< Home