Wednesday, October 12, 2016

மனக்குறள்

அகரவரிசை



மதுரை! தமிழ்வளர்க்கும் தூங்கா நகரம்!
நறுமண மல்லிகை ஊர்.

மா

மாசற்ற உள்ளம் அமைந்துவிட்டால் வாழ்விலே
ஈடற்ற செல்வம் அது.

மி

மிகைப்படுத்திச் சொல்லும் குணம்தான் வதந்தி!
புகைந்தால் அழிவைத்  தரும்.

மீ

மீன்விழியாள் தண்ணீரில் தன்விழியைப் பார்த்தபோது
மீன்தானோ என்றாள் வியந்து.

மு

முன்னணியின் பின்னணியில் ஆணுக்குப் பெண்ணிருப்பாள்!
பெண்ணுக்கோ ஆணிருப்பா னா?

மூ

மூக்குள்ள மட்டும் சளியிருக்கும்! இல்லறத்தில்
தாக்குவதும் தாங்குவதும் வாழ்வு.

மெ

மெட்டி ஒலிகேட்டால் உள்ளம் மயங்கிவிடும்!
அப்பப்பா! என்னமாயம்? சொல்.

மே

மேலோட்ட மாக எதையுமே நம்பாதே!
ஆழமாக ஆய்ந்தறிந்து நம்பு.

மை

மையிட்டால் கண்ணுக்குள் உள்ள தலைவனுக்கு
மைதான் இடையூறோ! சொல்.

மொ

மொட்டு, படிப்படியாய்த் தான்மலரும்! முன்னேற்றம்
அப்படித்தான் வாழ்விலே! சொல்

மோ

மோதலுக்கு மோதலோ வன்முறையைத் தூண்டிவிடும்!
மோதுகின்ற போக்கைத் தவிர்.

மௌ

மௌனம் மனதில் அமைதியை உண்டாக்கும்!
மௌனமே ஞானத்தின் வித்து.

0 Comments:

Post a Comment

<< Home