Saturday, October 08, 2016

மனக்குறள்

அகரவரிசை



பிணக்குகள் வந்தால் புறக்கணிக்க வேண்டும்!
இணக்கமே நிம்மதிக்குத் தூது.

ணா

மணாளனோ வாழ்வில் சரியில்லை என்றால்
குணவதி என்செய்வாள்?கூறு!

ணி

ஏணியாக மற்றவர்க்குத் தோள்கொடுத்தால் வாழ்துவார்கள்!
ஏணியாக வாழ்தல் சிறப்பு.

ணீ

தண்ணீரில் சென்றாலும் தண்ணீரைக் கேட்டாலும்
நம்மைத்தான் தாக்குகின்றார் பார்.
ணு

அணுவளவு நன்மையைச் செய்தாலும் அஃதைக்
மணங்களவாய் எண்ணி மகிழ்.

ணூ

கண்ணூறு (திருஷ்டி)

கண்ணூறு பட்டதென்று பூசணியைப் போட்டுடைப்பார்!
அங்கங்கே சாலை விபத்து.

ணெ

எண்ணெயைத் தேய்த்துச் சனிதோறும் நீராடச்
சொன்னவள் அவ்வைதான் அன்று.

ணே

கண்ணே! கலையழகே! என்றெல்லாம் தன்மழலைப்
பிஞ்சைத்தான் கொஞ்சிடுவாள் தாய்.

ணை

அணைகட்டி நீர்தடுப்பார்! வான்மழை கொட்டி
அணைதிறக்க வைத்துவிடும் பார்.

ணொ

கண்ணொடு கண்ணோக்கும் காதலர் மெய்மறப்பார்!
அந்தநேரம் வாய்ச்சொல் எதற்கு?

ணோ

மண்ணோடு மண்ணாக மக்கிவிடும் வாழ்விது!
கண்மணியே உட்பகை ஏன்?

ணௌ

ணௌவு! தெலுங்கில் சிரிப்பாம்! தமிழகரம்
ணௌவெழுத்தை ஏந்துதம்மா பார்.

0 Comments:

Post a Comment

<< Home