Thursday, October 06, 2016

அகரவரிசை

மனக்குறள்



சலனமற்ற உள்ளம் சமநிலையின் ஊற்று!
களங்கமற்ற ஞானத்தின் கூடு்.


சா

சான்றோரைச் சீண்டுகின்ற ஈனமனப் பித்தரை
வீணரெனச் சாடு நிமிர்ந்து.

சி

சிரிப்பு ! மனிதனுக்கு மட்டுமுள்ள வாய்ப்பு!
சிரிப்பே முகத்தின் அழகு.
சீ

சீற்றமும் துள்ளும் சினமும் மனிதனைக்
காட்டு விலங்காக்கும் காண்.
சு

சுரவழி சென்றான்! வரும்வழி பார்த்துக்
கலங்கித் தவித்திருந்தாள் மாது.


சூ

சூசகமாய்த் தென்றலேநீ ஏக்கத்தை ஏந்தலிடம்
காதருகில் சொல்வாயா? கூறு.


செ

செம்மண்ணில் மாரி கலந்ததுபோல் காதலர்
அன்பில் கலந்திடுவார் இங்கு.

சே

சேர்க்கை சரியில்லை என்றால் குணம்மாறி
வாழ்க்கையும் பாழாகும் பார்.

சை

சைகை மொழியால் தகவல் தெரிவித்தார்
பைந்தமிழே! நம்முன்னோர் தான்.

சொ

சொத்தைக் குறிவைத்து வாழ்கின்ற வாழ்க்கையில்
முட்டப் பகைவளரும் கூறு.

சோ

சோதனையின் கொம்பொடித்தால் வேதனைகள் நீங்கிவிடும்!
சாதனையாய் மாற்றிடலாம் சாற்று.

சௌ

சௌந்தரம்! என்றால் புறஅழகா? உள்ளழகு!
பண்பின் ஒழுக்கம் அழகு.

0 Comments:

Post a Comment

<< Home