Wednesday, October 05, 2016

மனக்குறள்

கு

குறுக்குவழி வாழ்க்கை உளைச்சலைத் தூண்டும்!
உறுத்தலில் ஆட்டுவிக்கும்! பார்.

கூ

கூழெனினும் தன்னுழைப்பால் வந்தால் அமுது!
பாலெனினும் மற்றவழி நஞ்சு.



கெ

கெடுதிகள் செய்தால் கெடுதிகள்  நேரும்!
கெடுமதி நிம்மதிக்குக் கேடு.

கே

கேழ்வரகில்  நெய்யொழுகும்  என்றாலும்  நம்புவதா?
தோழா!  பகுத்தறிவை  நம்பு.

கை

கைகால்கள்  நன்றாக  உள்ளவரை  சூழ்ந்திருப்பார்!
வையகத்தில்  இயங்குமட்டும்  வாழ்வு.
கொ
கொக்கோ உறுமீன் வருமட்டும் காத்திருக்கும்!
அப்படித்தான் வாய்ப்புகளை நாடு


கோ

கோடி மயக்கும்! மயங்கித்தான் பண்பிழந்தால்
கோடிக்குச்  செல்வோம்  நசிந்து
கௌ

கௌரவமாய்  வாழ்ந்தவர்கள்  ஏழ்மையின்  நண்டுகள்
கௌவியதால்  பாழானார்  பார்.


ஙப்போல்  வளைந்து  பணிவுடன்  வாழ்ந்தால்
எப்போதும்  நன்மதிப்பு  தான்

0 Comments:

Post a Comment

<< Home