Friday, October 07, 2016

ஙே
ஙேஙே எனவிழித்து வாழாதே! அத்தகைய
ஙேஙே விழிப்பைத் தவிர்



ஞமலியைப்போல் நன்றி யைக் காட்டலாம்! ஆனால்
மனதால் அடிமை, தவிர்.

ஞா

ஞானச்  செருக்கோ  இருக்கலாம்!  ஞாலத்தில்
ஈனச் செருக்கோ இழிவு.

ஞி

ஞிமிறு -- வண்டு

ஞிமிறு மலர்விட்டு வேறொன்றை நாடும்!
ஞிமிறுபோல்  நாமா?  திமிர்.

ஞீஞுஞூஞைஞோஞௌ

ஞிஞுஞூ  ஞைஞோஞௌ  என்றே  அகர
அணியில் திளைக்கிறது  காண்.

ஞெ( ஞெகிழம்--சிலம்பு)

ஞெகிழத்தால்  கோவலன்  மாண்டான்!  மதுரை
தகித்தது  கண்ணகி  யால்.

ஞே ( ஞேயம்--- அன்பு)

ஞேயம்  எலும்பையும்  இங்கே  உருக்கிவிடும்!
ஞேயமே  வாழ்வுக்கு  வேர்.


ஞொ ( ஞொள்ளுதல்-- அஞ்சுதல்)

ஞொள்ளுதல்  என்பதைத்  தீமைகள்  செய்வதற்(கு)
இவ்வுலகில்  பின்பற்று  நீ.

0 Comments:

Post a Comment

<< Home