Monday, October 10, 2016

மனக்குறள்



தன்னல வல்லூறாய் வட்டமிட்டு வாழ்ந்திருந்தால்
நிம்மதி கிட்டா துனக்கு.

தா

தாழ்வு மனப்பான்மை தங்க அனுமதித்தால்
வாழ்க்கை இருண்டுவிடும் பார்.

தி

திருக்குறளை வாழ்வின் பொதுமுறை யாக்கு!
இருள்மாசு நீங்கும் உணர்.

தீ

தீப்புண் குணமாகும் கண்மணியே! சொற்களால்
தாக்கியபுண் ஆனது பார்.

து

துப்பாதே மானிடனே கண்ட இடங்களிலே
அப்பப்பா நோய்தாக்கும் சொல்.
தூ

தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்
ஏற்றமுண்டு நேர்வழியில் செல்.

தெ

தென்னைக்கு நாமிங்கே என்னநீர் ஊற்றினாலும் நன்றியுடன்
தென்னை இளநீர் தரும்.


தே

தேக்கிவைக்கும் செல்வம் அறவழிக்கே! மறவழியா
காற்றில் சருகாகும் காண்.

தை

தைமாதம் பொங்கலிட்டு நன்றிசொல்வார் பைந்தமிழர்!
உய்வதற்கு ஏணி அது.
தொ

தொண்டுள்ளம் கொண்டவரை மண்ணகம் வாழ்த்திநிற்கும்!
பண்பின் சிகரம் இது.
தோ

தோல்வியும் வெற்றியும் வாழ்வின் இயல்புகள்!
தாயின் சமநிலை கொள்.
தௌ

(தௌவல்--- இளமை)

தௌவல் பருவத்தில் கற்றுத் தெளிந்துவிட்டால்
அல்லலின்றி வாழலாம் இங்கு.

0 Comments:

Post a Comment

<< Home