Saturday, October 15, 2016


மனக்குறள்

அகரவரிசை



லஞ்சமும் ஊழலும் நாட்டின் இயல்பானால்
கண்மணியே! கேவலமே வாழ்வு.

லா

லாபம், இழப்பு இரண்டும் வணிகத்தில்
பாடம் புகட்டும் உணர்.

லி

வலியோர்கள் வாழ்வார்! எளியோர்கள் தாழ்வார்!
புவியே உனக்கே இழிவு.

லீ

( நுண்ணோக்கி--MICROSCOPE)

லீவன்காக் நுண்ணோக்கி தன்னை அறிவியலில்
ஆவலுடன் கண்டறிந்தார் பார்.

லு

லுமும்பா !காங்கோவின் சிங்கந்தான்! கொன்றார்!
தினவில் உலகச் சதி.

லூ

லூயிபாஸ்ச் சர்தான் வெறிநாய்க் கடிமருந்தை
நேயமுடன் கண்டறிந்தார் சொல்.

லெ

லெமூரியா கண்டமோ ஆழிக்குள் மூழ்கி
அமிழ்ந்ததாய்ப் பாடமுண்டு பார்.

லே

லேசர்க் கதிர்கள் அறுவை சிகிச்சைக்கு
ஊடறுத்துப் பார்க்க எளிது.

லை

கலைத்துறை ஆபாச ஊடகமாய் மாறும்
நிலையேற்றால் நாட்டுக்குக் கேடு.

லொ

லொட்டு லொசுக்கெல்லாம் வேண்டாம் கழித்துவிடு
பட்டென்றே பாட்டிசொல்வார் அன்று.

லோ

லோலாக்கு காதுகளில் ஆட குதித்தாடி
மாலையில் ஆடுவார் மகிழ்ந்து.

லௌ

லௌகீக வாழ்வை ரசிப்போர்
துறவறத்தைக்
கவ்வுதல் என்றும் அரிது.

0 Comments:

Post a Comment

<< Home