Saturday, October 15, 2016


யவனர்,தமிழகம் வந்துபோன செய்தி
இலக்கியத்தில் நாம்படித்த துண்டு.

யா
யார்யாரோ சந்திப்பார் நண்பராக மாறுவார்!
கால  விளையாட்டைப் பார்.

யி
பயிர்பச்சை நீரின்றி காய்ந்துபோனால்  பாரில்
உயிரினங்கள்  தத்தளிக்கும் ! சாற்று.

யு
யுத்தம் அணுயுத்தம் ஆகிவிட்டால் புல்பூண்டு
மக்களும் மிஞ்சமாட்டார் கூறு.

யூ
யூகங்கள் ஏமாற்றும்!  தப்பாய் வழிகாட்டும்!
யூகத்தின் மெய்ப்பொருள் காண்.

யெ
தாயென்ன  திட்டினாலும் சேய்கள் மறந்துவிட்டுத்
தாயிடம் ஓடிவரும் பார்.

யே
ஈயேன் என்றெண்ணிச் சேர்த்துவைத்த செல்வங்கள்
போவேன்  என்றுபோகும் போ.

யை
மாயை எனத்தெரிந்தும் வீழ்ந்து துடிக்கின்றார்!
மாயைக்  கவர்ச்சி தவிர்.

யொ
காயென்றால் வன்சொல்! கனியென்றால்  இன்சொல்தான்!
காயைத் தவிர்ப்பதே பண்பு.

யோ
யோகிகள் போகவாழ்வைத் தள்ளமாட்டேன் என்றேதான்
போகிகளாய் வாழ்தல்  தவறு.

யௌ
யௌவனம்-- இளமை

யௌவனத்தில் ஆக்கபூர்வ ஆற்றலைப் பண்படுத்து!
அவனியில் முன்னேற்றம் உண்டு.

0 Comments:

Post a Comment

<< Home