Saturday, October 15, 2016

மனக்குறள்

அகரவரிசை



ழகரம்! தமிழின் சிகரம்! சிறப்பு
ழகரமென் றிதற்குப் பெயர்.

ழா

விழாநகரம் என்றே மதுரையைச் சொல்வார்!
விழாமணக்க வாழும் நகர்.

ழி

ஆழியின் ஆட்டம் சுனாமியாகும்! அத்தகைய
ஊழியே நாட்டுக்( கு) அழிவு.

ழீ

( கெழீஇய-- வளர்ந்தோங்கிய)

கெழீஇய நட்பாய்த் தொடர மனதால்
பழகிடும் பண்பே தளம்.

ழு

குழுஉணர்வின் கூட்டு முயற்சி இருந்தால்
குழுமம் வளரும் செழித்து.

ழூ

குழூவுக் குறியால் பொருள்விலை சொல்லும்
தெளிவு வணிகத்தில் உண்டு.

ழெ

கூழெனினும் நன்கு குளித்துக்  குடியென்றார்!
வாழ்வின் ஒழுக்கம் இது.

ழே

ஏழேழு வாழ்க்கை எடுத்தாலும் சான்றோரின்
தூயநட்பே நட்பாகும் பார்.

ழை

வாழை யடிவாழை யாய்மணக்கும் பண்புகள்
தேவை எனத்தெரிந்து போற்று.

ழொ

(ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாழ்)

தாழொன்று போட்டாள்! கூத்தனும் பாடிநின்றார்!
தாழிரண்டைப் போட்டாள் மறுத்து.

ழோ

பாழோ? வயலிலே பாடுபட்ட நம்முழைப்பு!
வாமழையே! வாழவைக்க வா.

ழௌ

ழௌவும் ழகரமும் நம்முதுமைப் பேச்சில்
குழறுவதைப் பார்ப்பார் சிரித்து.

0 Comments:

Post a Comment

<< Home