Saturday, October 15, 2016

மனக்குறள்

அகரவரிசை



வரவுகளுக் குள்ளே செலவென்றால் நன்று!
வரவுகளை மீறினால் தீது.

வா

வான்மழை பொய்த்துவிட்டால் நாடே வறண்டுவிடும்!
வானத்தைப் பார்த்துவாழும் நாடு.

வி

வில்லம்பு குத்திய புண்ணாறும்! ஆறாதே
சொல்லம்பு  தைத்திட்ட புண்.

வீ

வீரமென்றால் போர்க்களப் போர்மட்டுமா? ஈவிரக்க
ஈரமுந்தான் வீரமாகும் பார்.

வு

தாவுகின்ற கங்காரு தன்வயிற்றுப் பைக்குள்ளே
காக்கிறது குட்டியைத் தான்.

வூ

கருவூரில் தோன்றி பருவவூர்கள் தாண்டி
கருகுவோம் சாவூரில் தான்.

வெ

வெங்கொடுமைத் துன்பங்கள் சுற்றி வளைத்தாலும்
நன்றி மறவாதே நீ.

வே

வேடமிட்டே ஏமாற்றும் வேடதாரிக் கும்பலுக்குப்
பாடம் புகட்டும் மனம்.

வை

வைதேகி மான்விழிகள் மைவண்ணன் கண்களைக்
கவ்வியதால்  மெய்மறந்தார் காண்.

வொ

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சிக்கல்தான்!
தொல்லை தொடர்கதைதான் சொல்.

வோ

வோல்கா நதியைத்தான் ஐரோப்பா கண்டத்தின்
நீள நதியென்பார் இங்கு.

வௌ

( வௌவம்-- தாமரை)

வௌவமும் நீரும்போல் ஒட்டியும் ஒட்டாமல்
இவ்வுலகில் வாழ்தல் சிறப்பு.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home