Wednesday, November 15, 2017

இணையர்
குழந்தையாய் பொம்மையாய்

கண்மணி! அந்தக் குழந்தையின் கையிலே
வண்வண்ண பொம்மை! மனம்விட்டுப் பேசியேதான்
தன்விருப்பம் போல விளையாடும் காட்சியைப்பார்!
தன்னை மறந்தேதேதான் பொம்மையை ஆட்டுவிக்கும்
அன்பில் உள்ளததன் வாழ்வு!

ஆருயிரே! நீங்கள் குழந்தை! கைகளில்
சேர்ந்திருக்கும் பொம்மைதான் நானாவேன்! உங்களின்
 ஆர்வக் கரங்கள் அசைவிற்கே ஆடுகிறேன்!
வாழ்வின் மகிழ்வே அது.

கண்மணி! நீயிங்கே ஆட்டுவிக்கும் நேரத்தில்
வண்ணபொம்மை நானாவேன்!
அக்குழந்தை நீயாவாய்!
அன்பரசன் நானிங்கே ஆட்டுவிக்கும் நேரத்தில்
வண்ணபொம்மை நீயாவாய்!
அக்குழந்தை நானாவேன்!
கூட்டுறவில் நாமோ குழந்தையாய் பொம்மையாய்
போற்றித்தான்  வாழ்கின்றோம்  இங்கு.

0 Comments:

Post a Comment

<< Home