Sunday, February 17, 2019


குழந்தைக்குக் குறளமுதம்!

குறள் 77:

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

மகளே மகனே கேளுங்கள்!
வள்ளுவர் சொல்வதைக் கேளுங்கள்!

இரக்கம் கருணை உள்ளநெஞ்சில்
அன்பு என்றும் உறவாடும்!

நல்ல நல்ல பண்புகளும்
நீதி நேர்மை  வாய்மையும்

மனித ஒழுக்க நன்னெறியும்
வாழ்வில் அறமெனச் சொல்கின்றோம்!

இதனை விட்டு நெறிபிறழ்ந்தால்
நமது மனமே புண்படுத்தும்!

வெய்யிலில் காயும் புழுவைப்போல்
அய்யோ என்று துடிப்போமே!

மனமே வாட்டி எடுக்குமே
உளைச்சல் மனத்தில் குடியேறும்!



0 Comments:

Post a Comment

<< Home