Sunday, February 17, 2019

குழந்தைக்குக் குறளமுதம் !

குறள் 80:

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

அப்பா அப்பா பாரப்பா
பூங்கா காவல் காரரு

எரிஞ்சு எரிஞ்சு விழறாரு
அடிக்க ஓடி வர்ராறு!

அன்பா ரெண்டு வார்த்தைகள்
சொல்லிக் கேட்டதே இல்லப்பா!

அன்பே வாழ்வின் உயிர்நிலையாம்!
உள்ளம் ஏந்தும் உயர்நிலையாம்!

அன்பே இல்லா மானிடரின்
உடலோ போற்றும் உடலல்ல!

தோலால் போர்த்திய வெற்றுடம்பாம்!
எந்தப் பயனும் இல்லையம்மா!

 இந்த மாதிரி அன்பற்ற
மனிதரைப் பற்றித் தெளிவாக

பாப்பா! வள்ளுவர் தாத்தாதான்
இந்தக் குறளில் சொல்றாரு!

ஆகா உண்மை தானப்பா!
விளங்கிக் கொண்டேன் நன்றிப்பா!

0 Comments:

Post a Comment

<< Home