Sunday, November 03, 2019

வாழ்க்கைச் சக்கரம்!

வாழ்க்கையின் சக்கரம் நாளும் சுழன்றுவரும்!
மேலுள்ளோர் கீழ்ப்போவார்! கீழுள்ளோர் மேல்போவார்!
மாறிவரும் வாழ்க்கை சுழற்சியில் மக்களுக்கோ
ஏற்றம் இறக்கம் இயல்பு.

ஏற்றம் வரும்பொழுதோ துள்ளுவது கூடாது!
மாற்றம் இறங்கினால் சோர்ந்துவிடக் கூடாது!
மாற்றம் எதுவெனினும்  ஏற்கின்ற பக்குவத்தை
ஏற்றால் நிம்மதி உண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home