Sunday, November 03, 2019

முள்மீது சேலை

முள்மீது பட்டுத்துணி!

முள்வேலி மீதிங்கே பட்டுத் துணிவிழுந்தால்
முள்வேலி விட்டே எடுக்கின்ற நேரத்தில்
முள்முனையோ கையிலே குத்தவும் கூடாது!
முள்ளால் துணியும் கிழிந்துவிடக் கூடாது!
நல்லபடி யாகத்தான் பாதுகாப்பாய் நீக்கவேண்டும்!
இவ்வுலக வாழ்வில் இதுபோன்ற சூழ்நிலைகள்
அவ்வப் போது உருவாகும்! ஆனாலும்
எள்ளளவும் நம்முறவின் அன்பு சிதையாமல்
கையாண்டால் நிம்மதி உண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home